புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் வழக்கு – தமிழக முதல்வரைச் சந்திக்க உள்ள காரைக்கால் திமுக

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் திட்டமிட்டுள்ள காரைக்கால் திமுகவினர், தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளனர்.

தமிழக எல்லைக்கு அருகில் புதுச்சேரி மற்றும் காரைக்கால், ஆந்திர எல்லைக்கு அருகில் ஏனாம், கேரள எல்லைக்கு அருகில் மாஹே ஆகிய நான்கு பகுதிகள் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமாக உள்ளன.

ஆனால், புதுச்சேரிக்கு இதுவரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தபோதும், ஆளுநருக்கே அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படுகின்றன.

Facebook Comments Box