மதுரையில் நாளை தவெக இரண்டாம் மாநில மாநாடு

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறவுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மாநாடு நடைபெறும் திடல் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.

மதுரை–தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில், தவெக மாநில மாநாட்டின் 2வது அமர்வு நாளை (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், எல்இடி திரைகளுடன் கூடிய நவீன மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன நிறுத்துமிடம், திடலைச் சூழவுள்ள கட்சிக் கொடிகள், தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், வண்ண மின்விளக்குகள் என மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி நிலையில் நிறைவடைந்துள்ளன.

கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை, தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுத் திடலை நேரில் பார்வையிட்ட மதுரை எஸ்.பி. அரவிந்த், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வழித்தடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டின் பாதுகாப்பு பணியில் 3,000க்கும் மேற்பட்ட போலீஸார் பணியமர்த்தப்படுகிறார்கள்.

Facebook Comments Box