“அன்பும் விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்” – 50வது திருமண நாளில் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பகிர்வு
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 50வது திருமண நாளை முன்னிட்டு, “எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் தான் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்” என இளைய தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஸ்டாலின் பதிவு
தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஸ்டாலின் எழுதியிருந்த பதிவு:
“அரை நூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மன நிறைவான வாழ்க்கையாக மாற்றியுள்ளார். அவர்மீதான அளவற்ற அன்பே என் நன்றி.
எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் தான் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என்பதை இளைய தலைமுறைக்கு கூறிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழவேண்டும் என விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.
தலைவர்கள் வாழ்த்து
இதற்கு முன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து 50வது திருமண நாளை வாழ்த்தினர்.
அதையடுத்து ஸ்டாலின் பகிர்ந்திருந்த மற்றொரு பதிவில்,
“உயிரென, உறவென துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த தருணத்தில் பேரன்புடன் இல்லம்தேடி வந்து வாழ்த்திய கொள்கை உறவுகளான இயக்கத் தலைவர்களுக்கு குடும்பப் பாச உணர்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.