மதுரை மாநாடு வெற்றி; நம் இலக்கு மனசாட்சி கொண்ட மக்களாட்சி: விஜய் கடிதம்

மதுரையில் நடைபெற்ற மாநாட்டின் வெற்றி, ஒவ்வொருவரின் உழைப்பும் பங்களிப்பும் காரணமாகவே சாத்தியமானது. மனசாட்சி கொண்ட மக்களாட்சியை நிலைநாட்டுவதே நமது ஒரே இலக்கு என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “மதுரையில் நடந்த 2-வது மாநில மாநாட்டின் வெற்றி, உங்களின் உழைப்பும் பங்களிப்பும் காரணமாகவே நடந்தது. எவ்வளவு மறைமுக தடைகள் வந்தாலும், நமக்காக மக்கள் கூடும் இடங்கள் எப்போதும் கடல்போல நிரம்பும். இதனை உணர்ந்து மாநாட்டுப் பணிகளை சிறப்பாகச் செய்த நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், “நம் மீது வரும் விமர்சனங்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு பலமாக்கிக் கொள்வோம். மற்றவற்றை புறந்தள்ளிப் புன்னகைப்போம். மக்களோடு மக்களாக இணையும் அரசியல் மட்டுமே நமது நிலையான அரசியல். மனசாட்சி கொண்ட மக்களாட்சியை நிலைநாட்டுவதே நம் குறிக்கோள்.

1967, 1977 தேர்தலின் அரசியல் வெற்றி போன்று, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ் மக்கள் அதையே நிகழ்த்துவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box