ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை – விண்ணப்பிக்கும் முறை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.
திட்ட விவரம்
- அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டம் மூலம், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு உதவி வழங்கப்படுகிறது.
- இத்திட்டம், குழந்தைகள் 18 வயது வரை இடையறாது கல்வியைத் தொடர உதவுவதற்காக மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும்.
- பள்ளி படிப்பு முடிந்த பின், கல்லூரி கல்வியும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசு மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய குழந்தைகளின் உறவினர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்:
- குடும்ப அட்டை நகல்
- குழந்தையின் ஆதார் அட்டை நகல்
- பிறப்பு சான்றிதழ்
- கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
- வங்கி கணக்கு புத்தக நகல்
இந்த ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Facebook Comments Box