ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தொடர்பான தகவல் ஓஎன்ஜிசி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கை அடிப்படையில், ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய 1,403.41 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.

இதன்படி, எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின் முதல் கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம், சடயநேரி, கீழச்சிறுபோது, வல்லக்குளம், பனையடிஏந்தல், காடம்பாடி, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஆழமலந்தல், சீனங்குடி அழகர்தேவன் கோட்டை, அடந்தனார் கோட்டை, ஏ.மணக்குடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை ரூ.675 கோடி செலவில் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த அனுமதிக்காக கடந்த 2023 அக்டோபரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பித்தது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மனுவை ஆய்வு செய்தபின், 20 இடங்களில் சோதனை கிணறு அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Facebook Comments Box