நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் இன்று இலங்கை புறப்பாடு

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்களின் பல படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் தரப்பில் இலங்கை நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் விசாரணை நடைபெற்றபின், மொத்தம் 12 படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

இதன் அடிப்படையில், தற்போது இலங்கையின் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த 12 படகுகளின் நிலையைப் பரிசோதித்து, அவற்றை மீண்டும் கொண்டு வருவதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 25) விசைப்படகில் புறப்பட்டுச் செல்கின்றனர்.

Facebook Comments Box