“தமிழகத்தில் தனித்து முதல்வர் ஆக முடியாது” – ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் திண்டுக்கல்லில் கூறியதாவது, “தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு யாரும் முதல்வர் ஆக முடியாது. தமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. தமமுகவுடன் பயணிக்கும் கட்சி வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி” என தெரிவித்தார்.
அவர் மேலும், “தவெக மாநாட்டை வைத்து எதுவும் சொல்ல முடியாது. பிரதமர் மோடியை விமர்சித்து விஜய் பேசியது அரசியல் நாகரிகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருவரை விமர்சனம் செய்வதால் வளர்ச்சி ஏற்படும் என்பது குறுகிய மனப்பான்மை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பாலியல் தொல்லைகள், சாதியப் படுகொலைகள் அதிகரித்து, மாணவர்களில் மது, கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது” என்றார்.
ஜான் பாண்டியன், “திருமாவளவன் தமிழரா என்பதில் சந்தேகம் உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் ஹைட்ரோ கார்பன் திட்டம் முதலில் ஏன் அனுமதி பெற்றது, பின்னர் ஏன் மறுக்கப்பட்டது என்பது தெரியவில்லை” எனவும் கூறினார்.