“விடியல் எங்கே?” – திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை அன்புமணி பட்டியலிட்டார்

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகளில், 373 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என பாமக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“2021 தேர்தலை முன்னிட்டு, மக்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கில் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அதில் கூறப்பட்ட பல வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்த பிறகு நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை. இதனை வெளிப்படுத்தும் வகையில், பாமக ‘விடியல் எங்கே?’ என்ற தலைப்பில் விரிவான ஆவணத்தை வெளியிடுகிறது” என கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் திமுக வாக்குறுதிகள் குறித்து கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்:

1. மொத்த வாக்குறுதிகள் – 505

2. முழுமையாக நிறைவேற்றப்பட்டவை – 66

3. பகுதியளவு நிறைவேற்றப்பட்டவை – 66

4. நிறைவேற்றப்படாதவை – 373

அதாவது, 2021 தேர்தல் வாக்குறுதிகளில் 12.94% மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 87.06% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

மாநில சுயாட்சி மற்றும் தமிழ் வளர்ச்சி தொடர்பாக மொத்தம் 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 8 நிறைவேற்றப்படவில்லை, 3 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன, 1 மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர் நலன் தொடர்பாக கூறப்பட்ட 4 வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக 9 வாக்குறுதிகள் இருந்தன. இதில் 8 நிறைவேற்றப்படவில்லை, 1 மட்டும் பகுதியளவு நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

லோக் அயுக்தா அமைப்பை வலுப்படுத்தி, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கப்படும் (வாக்குறுதி எண் 18).

சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் (வாக்குறுதி எண் 19).

உழவர் நலன் மற்றும் வேளாண்மை தொடர்பாக 56 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 41 நிறைவேற்றப்படவில்லை, 7 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன, 8 மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வாக்குறுதி எண் 43).

ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைத்து, உலர்க்களங்களுடன் இணைந்த கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்படும் (வாக்குறுதி எண் 50).

நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் விநியோகிக்கப்படும் (வாக்குறுதி எண் 68).

நீர்ப்பாசன மேலாண்மை தொடர்பாக 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 23 நிறைவேற்றப்படவில்லை, 4 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன, 2 மட்டுமே நிறைவேற்றப்பட்டன.


நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்

நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள்:

  • நீர்நிலைகளை மேம்படுத்தும் நீர் மேலாண்மைத் திட்டம், முதல் கட்டமாக ரூ.10,000 கோடி நிதியுடன் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 89)
  • சென்னை மாநகரின் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகள் பாதுகாப்புக்காக ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 93)
  • நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு, பவானி – நொய்யலாறு – அமராவதியாறு இணைப்பு திட்டம் அமல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 103)

மீனவர்கள் நலன்:

  • 25 வாக்குறுதிகளில் ஒரே ஒன்று முழுமையாக நிறைவேற்றப்படவில்லை; 5 வாக்குறுதிகள் பகுதியளவு நிறைவேற்றப்பட்டன, 20 நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

  • மீனவர்களை காப்பாற்ற கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். (வாக்குறுதி எண் – 113)
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, அதற்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். (வாக்குறுதி எண் – 114)
  • மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 116)

நெசவாளர்கள் நலன்:

  • மொத்த 14 வாக்குறுதிகளில் 3 நிறைவேற்றப்பட்டவை, 2 பகுதியளவு நிறைவேற்றப்பட்டவை, 9 நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

  • நெசவாளர்களுக்கான தனியார் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 138)
  • ஜவுளித்துறையை மேம்படுத்த தனியான ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் – 142)

தொழிலாளர்கள் நலன்:

  • 8 வாக்குறுதிகளில் 6 நிறைவேற்றப்படவில்லை, 1 பகுதியளவு நிறைவேற்றப்பட்டது, 1 மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டது.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதி:

  • போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் – 152)

மாணவர்கள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு:

  • 33 வாக்குறுதிகளில், நீட் ரத்து உட்பட 21 நிறைவேற்றப்படவில்லை; 6 வாக்குறுதிகள் பகுதியளவு நிறைவேற்றப்பட்டுள்ளன; மற்றவை மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள் – திமுக 2021 தேர்தல்

மாணவர்கள் நலன்:

கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 159)

NEET தேர்வு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 160)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். (வாக்குறுதி எண் – 161)

முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 179)

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலை உறுதி செய்யப்படும். (வாக்குறுதி எண் – 181)

அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்பப்பட்டு, 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 187)

அரசு துறைகளில் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் – 188–191)

தொழில் வளர்ச்சி:

28 வாக்குறுதிகளில் 23 நிறைவேற்றப்படவில்லை; 3 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன; 2 மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்கும் சட்டம் இயற்றப்படும். (வாக்குறுதி எண் – 196)

வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 25,000 பேருக்கு ரூ.20 இலட்சம் குறைந்த வட்டி கடன் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 206)

மின்கட்டணம் குறைப்பு:

14 வாக்குறுதிகளில் 1 மட்டும் நிறைவேற்றப்பட்டு, 2 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன; 11 நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய வாக்குறுதி:

மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்படும்; இதனால் ஆண்டுக்கு ரூ.6,000 மிச்சமாகும். (வாக்குறுதி எண் – 221)

பொதுவிநியோகத் திட்டம்:

7 வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் 3 எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 239)

நியாய விலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் 1 கிலோ சர்க்கரை; உடனடியாக உளுந்து மீண்டும் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 240)

பெண்கள் நலன்:

22 வாக்குறுதிகளில் 14 நிறைவேற்றப்படவில்லை; 4 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன; மற்றவை முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

35 வயதுக்கு மேற்பட்ட கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை. (வாக்குறுதி எண் – 250)

5 வகையான திருமண நிதி உதவி திட்டத்தில் ரூ.30,000 வழங்கப்படுவதுடன் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 255–259)

அரசு ஊழியர்கள் நலன்:

10 வாக்குறுதிகளில் 1 மட்டும் நிறைவேற்றப்பட்டு, 9 நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். (வாக்குறுதி எண் – 309)

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 311)

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 31)

சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், காவல்துறை:

20 வாக்குறுதிகளில் 1 மட்டும் நிறைவேற்றப்பட்டு, 13 நிறைவேற்றப்படவில்லை; 6 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வர அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தல். (வாக்குறுதி எண் – 374)

சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும். (வாக்குறுதி எண் – 375)

ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற வேண்டும். (வாக்குறுதி எண் – 376)

இந்து சமய அறநிலையத்துறை:

17 வாக்குறுதிகளில் 11 நிறைவேற்றப்படவில்லை; 4 பகுதியளவு நிறைவேற்றப்பட்டன; 2 முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2,000 ஊதியம்; ஓய்வூதியம் ரூ.4,000. (வாக்குறுதி எண் – 406)

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். (வாக்குறுதி எண் – 413)

பயிற்சி பெற்ற 205 சாதி அர்ச்சர்கள் பணியமர்த்தப்படும். (வாக்குறுதி எண் – 417)

போக்குவரத்து:

27 வாக்குறுதிகளில் 24 நிறைவேற்றப்படவில்லை; 2 நிறைவேற்றப்பட்டன; 1 பகுதியளவு நிறைவேற்றப்பட்டது.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டண சலுகை. (வாக்குறுதி எண் – 446)

வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையங்கள் அமைப்பு. (வாக்குறுதி எண் – 448)

பிற துறைகள்:

57 வாக்குறுதிகளில் 37 நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், மரம் போன்ற கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் சேர்த்து விலை குறைப்பு. (வாக்குறுதி எண் – 468)

சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாதம் 1 உருளை ரூ.100 மானியத்தில் வழங்கப்படும். (வாக்குறுதி எண் – 503)

Facebook Comments Box