வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்றார். முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து 43 ஆயிரத்து 735 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜி.ஏ.ராமதாஸ், பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box