உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில்
திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது:
“வயிற்று வலி உள்ளிட்ட சிறிய உடல் உபாதைகளால் அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேவையான பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார்” என தெரிவித்தனர்.
Facebook Comments Box