“விஜய் மீதான புகாரை வாபஸ் பெற அழுத்தம்” – தவெக தொண்டர் சரத்குமார் குற்றச்சாட்டு

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்டதாக புகார் அளித்த சரத்குமார், “எனக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. இனி யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே நான் புகார் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் அளித்த புகாரின் பேரில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவருடைய பத்து பவுன்சர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்த சரத்குமார், தனிப்பட்ட முறையில் புகார் மனுவையும் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தரப்பில் என்னை குற்றம்சாட்டினாலும், விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன். ஆனால், புகாரை வாபஸ் பெறுமாறு தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள், அழுத்தங்கள் வருகின்றன. நான் அரியலூரில் இருந்து அந்தோத்யா ரயிலில் மதுரைக்கு வந்து மாநாட்டில் பங்கேற்றேன். எனினும், வேறு ஒருவர் தான் அந்த இளைஞர் என்று கூறி வீடியோ பரப்பி வருகிறார்,” என குற்றஞ்சாட்டினார்.

Facebook Comments Box