கச்சத்தீவை இந்தியாவிற்கு ஒப்படைக்க முடியாது: இலங்கை அமைச்சர்
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித் ஹேரத் கச்சத்தீவை இந்தியாவிற்கு ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.
கொழும்பு, இலங்கை: வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித் ஹேரத் செய்தியாளர்களிடம் பேட்டி வழங்கினார். அந்த பேட்டியில், மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய் கூறிய கச்சத்தீவு உரிமை தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலாக அவர் கூறியதாவது:
“கச்சத்தீவை இந்தியாவிற்கு எப்போதும் ஒப்படைக்கப்போகவில்லை. தென்இந்தியாவில் தற்போதைய தேர்தல் காலத்தில், அரசியல் காரணங்களுக்காக பலரும் வெவ்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்.
இது ஏற்கனவே பல முறை தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட பிரச்சினை. இதுபோன்ற அரசியல் கருத்துக்களை அதிகமாக பொருட்படுத்த தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
Facebook Comments Box