பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் – தமிழக அரசு உத்தரவு
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்த வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரணமாக, சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிக்கான பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும். ஆனால், இம்முறை திடீர் மாற்றமாக வெங்கடராமனுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடராமன், 1994-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். சிபிசிஐடி மற்றும் நிர்வாக பிரிவில் பணியாற்றியதற்காக அரசின் பாராட்டைப் பெற்றவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
Facebook Comments Box