டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத் தேர்வு – விருதுநகரில் 1,343 பேர் தேர்வெழுதி பங்கேற்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பும் நோக்கில், நேர்காணல் இல்லாத பணிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 7 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,048 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 699 பேர் வரவில்லை. 1,343 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் அனைத்திலும் கண்காணிப்பை வலுப்படுத்தும் விதமாக கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

Facebook Comments Box