“கழுதைகள் எங்கே?” – தெருநாய்கள் பிரச்சினை குறித்து கமல்ஹாசன் கருத்து

கழுதைகள் எங்கே? யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது?” என்று நடிகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, தெருநாய்கள் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்:

“இதற்கு தீர்வு மிகவும் எளிமை. உலக சரித்திரம், சமூக சுகாதாரம் குறித்து அறிந்தவர்கள் கழுதைகள் எங்கே என்று கவலைப்படுகிறார்களா? நமக்காக அவை எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? இப்போது, அந்த கழுதைகள் கூட காணப்படுவதில்லை. அதை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று யாரும் பேசுகிறார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; எவ்வளவு முடிந்தால் அவற்றை காப்பாற்ற வேண்டும்,” எனக் கூறினார்.

இந்தக் கருத்து, இந்தியாவில் சமீபத்தில் பெரும் தலைசிறந்த பிரச்சினையாக மாறிய தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு பின்னணியாக வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோக்கள், மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல்ஹாசன் கருத்து வெளியிட்டார்.

Facebook Comments Box