சசிகலாவை நான் சந்திக்கவில்லை: செங்கோட்டையன் விளக்கம்

அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சியினருடன் சுமார் 3 மணி நேரம் நீடித்த ஆலோசனையில் கலந்து கொண்டார். அப்போது, வரும் 5ஆம் தேதி (நாளை) செய்தியாளர்களை சந்தித்து விரிவாக கருத்துகளை தெரிவிப்பதாக கூறியதால், அதிமுகவுக்குள் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சசிகலாவை சந்தித்ததே இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், “வேறு கட்சியில் இணையப்போகிறீர்களா?” என்ற கேள்விக்கு, “அனைத்து விஷயங்களுக்கும் நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறினார்.

Facebook Comments Box