“பழனிசாமி தலைமையை மறுக்க வேண்டும்” – புகழேந்தி வலியுறுத்தல்
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி புகழேந்தி, “பழனிசாமியின் தலைமை வேண்டாம் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு காலத்தில் பழனிசாமி, செங்கோட்டையன் பின்னால் நடந்து வரவே முடியாது; ஓடிக்கொண்டு தான் பின்தொடர்ந்தார். இன்று தமிழகமே செங்கோட்டையன் எதோ பெரிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், அவர் விளையாட்டாக நடந்துகொள்ளக் கூடாது. அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற பெயரில் பழனிசாமிக்கு ஆதரவாக நிற்பது தவறானது.
பழனிசாமி தலைமையில் பயணம் செய்தால், செங்கோட்டையன் 7 முறை வெற்றி பெற்ற கோபிசெட்டிபாளையத்திலும் தோல்வி அடைவார்; டெபாசிட் கூட கிடைக்காது. அதிகார மனோபாவத்துடன் நடக்கும் பழனிசாமியின் தலைமை வேண்டாம் என்று பொதுமக்களும், அதிமுகவினரும் விரும்புகிறார்கள். எனவே, செங்கோட்டையன் இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
பழனிசாமி தலைமையில் அதிமுக, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும். டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதை நான் வரவேற்கிறேன். ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வம் விலகியிருக்கிறார். அதேபோல, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைவும் விரைவில் அந்தக் கட்சியில் இருந்து விலகுவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.