ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – உதயநிதி வழங்கினார்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் 396 சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அவர், “நாட்டின் அளவில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் அதிக அளவில் உள்ள மாநிலம் தமிழகமே. இங்கு 70 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இதை 100 சதவீதமாக்கும் வகையில் ஆசிரியர்கள் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுவில் ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கும்.

Facebook Comments Box