தங்கச் சங்கிலியை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் கிளாரா – மேயர் பிரியா பாராட்டு

சென்னை திருவான்மியூர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த கிளாரா என்ற பணியாளர், சாலையில் கிடைத்த தங்கச் சங்கிலியை கண்டுபிடித்து, எந்தவித தாமதமின்றி திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த நேர்மையான செயலுக்காக, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா நேற்று அவருக்கு பாராட்டு வழங்கி கவுரவித்தார்.

மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடையாறு மண்டலத்தில் இ.சி.ஆர் பிரதான சாலையில், மருதீஸ்வரர் கோவில் எதிரே நடைபெற்ற தூய்மைப் பணியின் போது தங்கச் சங்கிலியை கண்டெடுத்த கிளாரா, உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Facebook Comments Box