கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு, கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை ஆய்வாளர் (Grade-II) பதவிக்கு புதிய கல்வித் தகுதியை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேரடி நியமனத்திற்கான தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், பிளஸ்-2-ல் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களில் ஒன்றை படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலர் என். சுப்பையன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கால்நடை ஆய்வாளர் (Grade-II) பதவி நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு என்ற இரு வழிகளில் நிரப்பப்படும்.
  • இதற்கான விகிதாசாரம் 9:1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பதவி உயர்வு மூலம் வருபவர்கள், கால்நடை பராமரிப்பு துறையில் உதவியாளராக குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

அத்துடன், நேரடி நியமனமாகவோ அல்லது பதவி உயர்வாகவோ கால்நடை ஆய்வாளராக நியமிக்கப்படுபவர்கள், நியமனத்திற்கு பின் 11 மாத கால கால்நடை ஆய்வாளர் பயிற்சியை (Training) கட்டாயமாக முடிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box