பாஜக-அதிமுக கூட்டணியால் வாக்கு திருட்டு அபாயம்: ப. சிதம்பரம் எச்சரிக்கை

திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற “வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வாக்கு திருட்டை நிகழ்த்தும் சூழலை உருவாக்கும் என்று குற்றம்சாட்டினார்.

அவர் உரையில் கூறியதாவது:

  • தேர்தல் எண்ணிக்கையில் பிழைகள், தோல்வியடைந்த வேட்பாளரை வெற்றியாளராக அறிவித்த சம்பவங்கள் புதிதல்ல.
  • கர்நாடகத்தில் போலியான வாக்காளர்கள், வாக்காளர் பெயர் நீக்கம் போன்ற மோசடிகள் நடந்துள்ளன.
  • ராகுல்காந்தி வாக்கு திருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், தேர்தல் ஆணையம் விசாரிக்க மறுக்கிறது.
  • பிஹார், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டு, தமிழ்நாட்டிலும் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் அவர்,

“தமிழ்நாட்டில் திமுக அணி, அதிமுக அணி தனித்தனியாக இருந்தால் பிரச்னையில்லை. ஆனால் அதிமுக பாஜகவுடன் இணைந்திருப்பதால் சந்தேகம் எழுகிறது. அடுத்த 8 மாதங்கள் விழிப்போடு இருந்து வாக்கு திருட்டை தடுக்க வேண்டும். இல்லையெனில் பிஹாரில் நடந்தது போல இங்கும் நடக்கும் அபாயம் உள்ளது” என எச்சரித்தார்.

மாநாட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அனைவரும் “வாக்குரிமை மீட்பு உறுதிமொழி” எடுத்துக்கொண்டதுடன், “வாக்குகளை திருடாதே” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

Facebook Comments Box