ஒரே நாளில் பத்திரப் பதிவில் சாதனை – ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் பி.மூர்த்தி
ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான செப்டம்பர் 4-ம் தேதி, பத்திரப் பதிவுத்துறையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“பொதுமக்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு, ஆவணி மாத சுபமுகூர்த்த தினத்தில் (செப்.4) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பதிவுத்துறை புதிய சாதனையை எட்டியுள்ளது. ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2025–26 நிதியாண்டில் மிகப்பெரிய வருவாயாகும்” என்றார்.
மேலும், இதற்கு முன்பு அதே நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாய் பதிவாகியிருந்தது என்றும் அமைச்சர் மூர்த்தி குறிப்பிட்டார்.
Facebook Comments Box