“அதிமுக கட்சி விரைவில் ஆம்புலன்ஸ் மூலம் செல்லும் நிலை வரும்” – உதயநிதி ஸ்டாலின்

“தமிழக மக்கள் விரைவில் அதிமுக கட்சியை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அனுப்பும் சூழலை உருவாக்குவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில், ரூ.28.75 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்தை இன்று திறந்து வைத்து பார்வையிட்டபோது அவர் பேசினார்.

அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

“எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மக்களை சந்தித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த பொது கூட்டத்தில் அவர் சாலையோரத்தில் நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு நோயாளிகளை கொண்டு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டி உள்ளே செல்ல முடியாமல் தடைகள் உருவாக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி தலைவரிடம் நான் சொல்ல விரும்புவது – நீங்கள் இப்போது ஆம்புலன்ஸ் வண்டிகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள். ஆனால் உண்மை என்னவெனில், உங்கள் கட்சியே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்ல வேண்டிய நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள். உங்கள் இயக்கம் விரைவில் ஐசியூ-வில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும். அப்போது உங்களைக் காப்பாற்றும் பொறுப்பையும் முதல்வர் மேற்கொள்வார்” என உதயநிதி தெரிவித்தார்.

Facebook Comments Box