முல்லைப் பெரியாறு அணையில் செப்.11-ம் தேதி துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் செப்டம்பர் 11-ம் தேதி துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பருவநிலை மாற்றக் காலங்களில் வழக்கமாக நடைபெறும் இந்த ஆய்வில், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பொறியாளர் கிரிதர் தலைமையிலான குழு பங்கேற்கிறது.

தமிழகத்தின் சார்பில் அணை கண்காணிப்புப் பொறியாளர் ஷாம் இர்வின், கம்பம் சிறப்பு கோட்டப் பிரிவு நிர்வாகப் பொறியாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கேரளாவின் சார்பில் நீர்ப்பாசனத் துறை பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜி ஆகியோர் உட்பட 5 பேர் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள், “ஆய்வுகள் பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுகின்றன. நீர்மட்டத்தை உயர்த்துவதில் முன்னேற்றம் இல்லை. தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக் கூறினர்.

Facebook Comments Box