அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பற்றிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.”

அட்டவணைப்படி:

  • செப்டம்பர் 15 – தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாயம் தொகுதி
  • செப்டம்பர் 18 – மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி
  • செப்டம்பர் 20 – செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் தொகுதி
  • செப்டம்பர் 25 – திருவள்ளூர் மத்திய மாவட்டம், அம்பத்தூர் தொகுதி

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிலைகளிலும் உள்ள கழக மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook Comments Box