மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் – உதவி சித்த மருத்துவ அலுவலர் 27 பேர் நியமனம்

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மருத்துவத் துறையில் உள்ள உதவி சித்த மருத்துவ அலுவலர் பதவியில் 27 காலியிடங்களை, நேரடி நியமன முறையில், போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்) பட்டம் பெற்றவர்களே விண்ணப்பிக்கலாம். மேலும், மத்திய இந்திய மருத்துவ வாரியத்தில் அல்லது தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

  • பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 37.
  • இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். தேர்வு கணினி வழி நடத்தப்படும். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீட்டு வாரியாக உள்ள பணியிடங்கள், தேர்வுமுறை, தேர்வு கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட முழு விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், நியமன ஆணை கிடைத்த ஒரு மாதத்துக்குள் பணியில் சேர்ந்தாக வேண்டும். மேற்படிப்பு போன்ற காரணங்களைக் கூறி கால அவகாசம் கேட்க அனுமதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box