கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்: பெ. சண்முகம் விஜய்க்கு அறிவுரை

தவெக தலைவர் விஜய்க்கு, கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

“தவெக தலைவர் விஜய் தனது பேச்சில் ‘அரசியலுக்குள் நுழைந்தாலே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை’ என்று கூறியிருக்கிறார். இதை சிலர், அவர் பெரிய தியாகம் செய்கிறார் என பெரிதாக்குகிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எப்போதுமே தங்கள் பதவியைப் பயன்படுத்தி பணம் சேர்த்தவர்கள் அல்ல. எதிரிகளால் கூட அப்படி குற்றம் சாட்ட முடியாது.

இ.எம்.எஸ், பி. சுந்தரய்யா, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றோர் அகில இந்திய பொதுச் செயலாளர்களாக இருந்து, நேர்மையும் தியாகமும் நிரம்பிய வாழ்க்கையை நடத்தினர். தலைவர்களே அல்ல, அடிப்படை உறுப்பினர்களும் கூட தங்களுடைய சொத்துகளை கட்சிக்கே வழங்கியவர்கள்.

உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணிப்பதே கம்யூனிஸ்ட்களின் அரசியல். அதனால், வரலாற்றை நன்கு படிக்கவும், மிஸ்டர் விஜய். மக்களுக்காக உண்மையில் தியாகம் செய்வது என்ன என்பதை உணர வேண்டுமெனில், கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தறியுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box