செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை – தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களுக்கு 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகைகளையொட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

போத்தனூர் ரயில் சேவை

  • சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 தேதிகளில் இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் (06123) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
  • மறுமார்க்கமாக, போத்தனூரிலிருந்து செப்.26, அக்.3, 10, 17, 24 தேதிகளில் மாலை 6.30 மணிக்கு (06124) ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து அடையும்.

செங்கோட்டை ரயில் சேவை

  • சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.24, அக்.1, 8, 15, 22 தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு (06121) ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
  • மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 தேதிகளில் இரவு 9 மணிக்கு (06122) ரயில் புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

நாகர்கோவில் ரயில் சேவை

  • நாகர்கோவிலிலிருந்து செப்.28, அக்.5, 12, 19, 26 தேதிகளில் இரவு 11.15 மணிக்கு (06012) ரயில் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
  • மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27 தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு (06011) ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

திருநெல்வேலி ரயில் சேவை

  • திருநெல்வேலியிலிருந்து செப்.25, அக்.2, 9, 16, 23 தேதிகளில் இரவு 9.30 மணிக்கு (06070) ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
  • மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரிலிருந்து செப்.26, அக்.3, 10, 17, 24 தேதிகளில் நண்பகல் 12.30 மணிக்கு (06069) ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இதுதவிர, சென்னை எழும்பூர் – தூத்துக்குடி மற்றும் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையேவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செப்.17) காலை 8 மணியிலிருந்து தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Facebook Comments Box