தொழிலாளர் கோரிக்கைகளை புறக்கணித்தால் போராட்டம் தவிர வழியில்லை: பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீதான அக்கறையை அரசு காட்டவில்லை என்றால் போராடுவதை தவிர வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு சொற்பொழிவில் பேசிய அவர், “மாநில அரசின் உரிமைக்கான போராட்டம் வெற்றியடைய வேண்டியது போலவே, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அவற்றில் போதிய அக்கறை செலுத்தவில்லை” என்றார்.

மேலும், “போக்குவரத்து தொழிலாளர்கள் 30 நாட்களுக்கும் மேலாக போராடுகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது, நீதிமன்ற உத்தரவின் மூலம் அவர்களை ஒதுக்கி வைத்தனர். தாம்பரத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதியின்றி துன்புறுகின்றனர். கொடுமையான ஒப்பந்த முறையை நிறுத்தி, தொழிலாளர் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில், தொழிலாளர் விரோத அணுகுமுறைக்கு எதிராக போராட வேண்டிய நிலை வரும்” என்றும் அவர் எச்சரித்தார்.

Facebook Comments Box