திண்டுக்கல், மதுரை, சிவகங்கை – வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு போகப் பாசனத்துக்காக இன்று (செப்.18) காலை நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும். இதில் பெரியாறு பாசனப்பகுதி 85,563 ஏக்கர், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் 19,439 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்க உள்ளது.

நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Facebook Comments Box