வானிலை முன்னறிவிப்பு: செப்டம்பர் 26 வரை தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் நாளை (செப்.21), நாளை மறுநாள் ஆகிய தினங்களில் வட தமிழகத்தின் சில பகுதிகளில், தென் தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் செப்டம்பர் 23 முதல் 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை தொடரும்.

சென்னை நிலைமை:

நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை ஏற்படும்.

கடல் பகுதிகள்:

தென்தமிழகம், வடதமிழகம் கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை மணிக்கு 35-45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவுகள் (கடைசி 24 மணி நேரம்):

அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், திருவள்ளூர் ஜெயா பொறியியல் கல்லூரியில் தலா 7 செ.மீ.

சென்னை அம்பத்தூர், அயப்பாக்கம், கொரட்டூர் தலா 6 செ.மீ.

திருவள்ளூர் ஆவடி, திருச்சி புள்ளம்பாடி, ஈரோடு நம்பியூர் தலா 5 செ.மீ.

காஞ்சிபுரம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, கரூர் தோமலை, சென்னை வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், புழல், மதுரவாயல், கொளத்தூர், அயனாவரம், மேடவாக்கம், புதுக்கோட்டை குடுமியான்மலை, சேலம் மேட்டூர், கடலூர் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box