“நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவர்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால்

தவெகவின் தலைவர் விஜய், வரும் தேர்தலில் திமுகவுடன் நேரடியாக போட்டியிடும் நிலையில், “பூச்சாண்டி வேலை வேண்டாம்; நீங்களா, நானா என்று பார்க்கலாம்” என்று திமுகவுக்கு வெளிப்படையான சவால் விடுத்தார்.

நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்ட பொதுமக்களிடம் பேசிய அவர், தமிழக மீன் ஏற்றுமதி 2-வது இடத்தில் இருப்பினும், நாகையில் நவீன வசதியுள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை என்றும், மீனவர் பகுதி அடிப்படை வசதியின்றி போராடி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுப்பது நமது கடமை. 14 ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் மீனவர்கள் தாக்கப்பட்டதை நினைவில் வைத்துக் பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் எப்போதும் மக்களுடன் இருக்கிறேன். ஆனால் மீனவர் பிரச்சினையில் திமுக கபட நாடகம் செய்கிறது” என்றார்.

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து, “முதல்வர் வெளிநாட்டுப் பயணம் சென்றதும் ‘பல ஆயிரம் கோடி முதலீடு’ என அறிவிக்கிறார். ஆனால் அந்த முதலீடு எங்கே? தமிழக மக்களுக்கு வரும்தா, உங்கள் குடும்பத்திற்கு மட்டும் வருமா?” என்று விமர்சித்தார். மேலும், மக்கள் சந்திப்பில் மின்சாரம் நிறுத்தப்படுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றவற்றை நேரடியாக கேள்வி எழுப்பினார்.

விஜய், “நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவர். 2026 தேர்தலில் திமுகவுடன் நேரடியாக போட்டி. பூச்சாண்டி வேலை வேண்டாம்; நேர்மையாக தேர்தலை சந்தித்து நீங்களா, நானா என்று பார்த்துவிடலாம்” என தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தெற்கு வீதியில் தொடர்ந்த பேச்சில், “திருவாரூரில் சாலை வசதி இல்லை. நெல் கொள்முதல் மையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வசூலிக்கப்படுகிறது. பல கோடி ரூபாய் விவசாயிகளிடம் பிடுங்கி வருகின்றனர். கல்வி, மருத்துவம், ரேஷன், வறுமை இல்லாத, குடும்ப ஆதிக்கம் இல்லாத, ஊழல் இல்லாத உண்மையான மக்களாட்சிதான் தவெகவின் நோக்கம்” என கூறி மக்கள் வாழ்வில் உண்மையான மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தினார்.

Facebook Comments Box