தூத்துக்குடியில் கப்பல் தளங்கள் வளர்ச்சிக்கு புதிய அடித்தளம்: முதல்வர் பெருமிதம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படுவது தென் தமிழக வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் அளித்ததாவது: தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில், கொச்சின் ஷிப்யார்டு (CSL) மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார். இதன் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:
“கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு சங்கப் பாடல்கள் சொல்லும். தற்போது தூத்துக்குடியில் 2 கப்பல் தளங்கள் அமைக்கப்படுகின்றன; இதில் 55,000 பேர் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். இது தென் தமிழக வளர்ச்சிக்கு புதிய அடித்தளம் அமைக்கும்.”