சுவாமி விவேகானந்தர் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

தேச நலனுக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை, உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் நினைவு தினம் இன்று.

தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகள் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்கியவர். பன்மொழிப் புலமை பெற்றவர். பல தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வாழ்ந்தவர்.

ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் நினைவைப் போற்றுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Facebook Comments Box