திருவண்ணாமலையில் அண்ணா சிலை திருட்டு – அக்டோபர் 3ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை நகரில் மறைந்த முதல்வர் அண்ணாவின் சிலை பீடமும் கல்வெட்டும் சேதப்படுத்தப்பட்டு, சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொறுப்புக்கூறியவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அதிமுக அக்டோபர் 3-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்தச் செயல்பாடும் நடைபெறவில்லை. இதனை கண்டித்தும், திமுக அரசின் செயலிழந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அக்டோபர் 3-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா சிலை அகற்றப்பட்ட இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் நடைபெறும். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராமச்சந்திரன், தூசி மு. மோகன், ஜெயசுதா ஆகியோர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க முன்னாள் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box