விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை
கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீஸார் வீட்டிற்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் மற்றும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதற்கான விசாரணை போலீஸார் நடத்தி வருகின்றனர். கரூரில் ஏற்பட்ட கொடிய கூட்ட நெரிசலுக்குப் பின்னர், இன்று விஜய் வீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் கூட பரபரப்பை உருவாக்கியுள்ளது.