ஆயுதபூஜை: 4.80 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் – பேருந்து, ரயில்களில் கூட்டம்

ஆயுதபூஜை பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை பரப்பாய்வாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் கோயம்பேடு, பாரிமுனை, தியாகராயநகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் பூஜை பொருட்கள் – பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய் மற்றும் பழங்கள் – விற்பனைக்கு வந்த மக்கள் கூட்டத்தால் வணிகம் பெருகியது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கடைவீதிகளில் திரண்டதால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதேசமயம், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சோதனை அதிகாரிகள் மூலம் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அபராதம் விதித்தது.

சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இதன் மூலம், அரசு பேருந்துகள், ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மூலம் மொத்தம் 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Facebook Comments Box