கரூர் துயரம்: அவதூறு கருத்து வழக்கில் கைது – யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவின.

கரூர் சம்பவம் குறித்து தவறான தகவல்கள் அல்லது வதந்தி பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது. இதன் பின்னர், அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று கைது செய்யப்பட்டார்.

இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவர் வரும் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments Box