“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: “தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்த்த போது, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. இருந்திருந்தால் அது மொழியில் வெளிப்பட்டிருக்கும்.”

விருதுநகரில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: விஜய் வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு யார் காரணம்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்பட வசனப் போலவே வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை அல்ல.

மற்ற இடங்களில் இல்லாமல், கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இதேபோல் நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று கூறப்பட்டாலும், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லை. நான் நேரில் சென்று பார்த்தேன்; கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் ஏற்பட்டதாக இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருந்தால், அருகில் ஆள் ஏன் இருக்க வேண்டும்?

வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தியிருக்கலாம், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவது சின்ன பிள்ளைகளின் விளையாட்டுப் பேச்சு போலவே இருக்கிறது. முதல்வர் மேல் மரியாதை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அவர் இருந்த நாற்காலியில் பல தலைவர்கள் இருந்தனர்.

சீமான், “விஜய் இவ்வாறே பேச வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.

Facebook Comments Box