செங்கல்பட்டு அருகே கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறி, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பில்: “செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை, சென்னை பெரம்பூர் அகரம் பகுதியிலிருந்து வந்த 17 நபர்களுடன் சுற்றுலா சென்ற வேன் ஒன்றில் பயணம் செய்தனர். அவர்களில் பெரம்பூர் சக்கர பாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது மகள்கள் கார்த்திகா (17) மற்றும் துளசி (16) கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த மாதம் 30ம் தேதி இருவரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதில் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொண்டு, மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Facebook Comments Box