புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் ஆயுத பூஜை காரணமாக புதன்கிழமையும், காந்தி ஜெயந்தி காரணமாக வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டது. சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. இதனால் வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாளாக இருந்தது. இதையடுத்து இன்று (அக்.3) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தரவில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலுள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களுக்கு மொத்தம் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறது. வெள்ளிக்கிழமைக்கு பதிலாக பிறிதொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box