சென்னை: ரோந்து சென்ற போலீஸ் எஸ்ஐ மீது தெரு நாய் தாக்குதல்!

சென்னையில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை (எஸ்ஐ) தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், நாய்கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியில் இருந்த வினோத் குமார் (35) என்ற எஸ்ஐ, தனது இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருணாச்சலம் தெரு வழியாகச் சென்றபோது, ஒரு தெரு நாய் திடீரென பின் தொடர்ந்து, அவரை கடித்து குதறியது. இதனால் அவர் கையில் மற்றும் காலில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல் உதவி சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகரில் தொடர்ந்து நடக்கும் நாய்கடி சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யச் சென்னைக் கார்ப்பரேஷனுக்கு மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

Facebook Comments Box