பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் மறைந்தார். வயது மூப்புடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை உயிரிழந்தார்.

இந்தச் செய்தி பரவியதை அடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவின் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

தாயை இழந்த துயரத்தில் வாடும் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box