அதிமுக 54-வது ஆண்டு தொடக்கவிழா: அக்டோபர் 17, 18-ம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது: 54-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்டோபர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இவை கட்சியின் 82 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறும்.

அந்த கூட்டங்களுக்கான இடங்கள் மற்றும் சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, அக்டோபர் 17-ம் தேதியில் சேலத்தில் நான் உரையாற்றுகிறேன். மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

Facebook Comments Box