கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றங்கள்
செங்கல்பட்டு யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – திருமால்பூருக்கு இன்று காலை 7.27க்கு புறப்படும் மின்சார ரயிலுடன் சேர்ந்து, கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 9.31, 9.51, 10.56, பகல் 11.40, நண்பகல் 12.25க்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமால்பூர் – கடற்கரை காலை 11.05க்கு இயக்கப்படும் ரயிலுடன் சேர்ந்து, செங்கல்பட்டு – கடற்கரை இடையே பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.10, 1.45, பிற்பகல் 2.20க்கு இயக்கப்பட வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மாற்றாக, கடற்கரை – செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.