கன்யாகுமரியில் சி.வேலாயுதம் எம்எல்ஏ மணிமண்டபத்தை திறந்து வைக்க பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வருகிறார்.
தென்னிந்தியாவின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அமரர் C.வேலாயுதம் அவர்களின் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவானது, இன்று (23.07.2024 செவ்வாய்கிழமை) காலை 11 மணியளவில் கன்யாகுமரி மாவட்டம் தொட்டியோடு, கீழகருப்புக்கோடு பகுதியில் உள்ள அமரர் C.வேலாயுதம் அவர்களின் நினைவு மணிமண்டவத்தை நமது தமிழக பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார்.
கன்யாகுமரி மாவட்ட பாஜக தலைவர் சி.தர்மராஜ் கூறியதாவது: இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தாமரை சொந்தங்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கன்யாகுமரி மாவட்ட பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Facebook Comments Box