இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
7.5 சதவீத இடஒதுக்கீட்டால், 2020ல் 435, 2021ல் 555, 2022ல் 584, 2023ல் 625 என மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் முகங்களைப் பார்ப்பதில் நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல், இந்த ஆண்டும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மகத்துவத்தை பறைசாற்றும் நேர்காணல்களைப் பார்த்து நானும் மகிழ்ந்தேன்.
அவர்களின் பெற்றோரைப் போலவே எனக்கும் இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கனவை நனவாக்கிய அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களைப் போன்ற பல மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பு அ.தி.மு.க. பெருமை
உங்கள் சாதனைகள், ஏழை மாணவர்களுக்கு மேலும் பல நலத்திட்டங்களை வழங்க பொதுப்பணியில் அயராது உழைக்க என்னை ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் உயர்கல்வியில் சிறந்து விளங்கவும், உலக அளவில் சிறந்த மருத்துவர்களாக கொழுச்சி மற்றும் தமிழக மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Home Tamil-Nadu இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்…...
இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்… எடப்பாடி பழனிசாமி
Facebook Comments Box