10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. “தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இந்த ஆண்டு தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட 10ம் வகுப்பு சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இந்த நிலையில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாறாக, தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறுபான்மையின மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் இன்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Discussion about this post