விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாலை மறியலின் போது டிஎஸ்பி தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் காளிகுமார். 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மற்றும் போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து பெண் டி.எஸ்.பி.யை தாக்கியது தொடர்பாக 3 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments Box